துவரம் பருப்பு 50 கிராம், கடலைப் பருப்பு 25 கிராம் இவற்றை நெய் விட்டுப் பக்குவமாய் வறுத்துக் கொண்டு, 300 மில்லி நீர் வைத்து பருப்பை அதில் கொட்டி வேக விடவும். நன்றாய் வெந்ததும் உருண்டைக் கத்தரிப் பிஞ்சு பத்து, இதைத் துண்டித்துவிடாமல் நான்காய்ப் பிளந்தும், முருங்கைக்காய் இரண்டை விரல் நீளம் அரிந்து பருப்பில் போட்டு உரித்த பூண்டு மூன்று பருப்பில் போட்டு வேக விடவும். (தேவைப்படுவோர் மட்டும் பூண்டு சேர்த்துக் கொள்ளலாம்)
மிளகாய் வற்றல் ஆறு, மிளகு கால் தேக்கரண்டி, மஞ்சள் ஒரு சிட்டிகை, மல்லி ஒரு தேக்கரண்டி, கொப்பரைத் தேங்காய்த் துருவல் ஒரு தேக்கரண்டி இவைகளை நெய் விடாமல் பக்குவமாக வறுத்து வெண்ணெய்ப் போல் அரைத்து ஆழாக்கு (100 மில்லி) ஜலத்தில் கரைத்து, பருப்பில் கொட்டி மூடி வைக்கவும்.
200 மில்லி ஜலத்தில் புளி எலுமிச்சங்காய் அளவு, உப்பு மூன்று தேக்கரண்டி இவற்றை கரைத்து குழம்பில் விட்டு மூடி வைக்கவும்.
குழம்பு நன்றாய் கொதித்து காய்கள் வெந்ததும், தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து, மூன்று தேக்கரண்டி நெய்விட்டுக் காய்ந்ததும் அரிந்த வெங்காயம் 10 கிராம், கடுகு அரைக்கால் தேக்கரண்டி, சீரகம் அரைக்கால் தேக்கரண்டி, பெருங்காயம் கொஞ்சம், கறிவேப்பில்லை ஆர்க்கு ஒன்று இவற்றைப் போட்டு தாளிதம் செய்து வெங்காயம் சிவந்ததும் குழம்பைத் தாளித்ததில் கொட்டி ஆவி போகாமல் மூடி வைக்கவும்.
பிறகு மற்றொருமுறை பெருங்காயம் நீங்கலாக மற்ற பொருட்களைப் போட்டு தாளிதம் செய்து கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் கொட்டி, கிளறி விட்டு, கொத்தமல்லித் தழை பத்து போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கி மூடவும்.

No comments:
Post a Comment