தேவையானவை:
சேமியா - 250 கிராம்
பால் - 200 மில்லி
முந்திரி - 10
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 6
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
தயிர் - 300 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
நெய் - 4 ஸ்பூன்
கடுகு - ஒரு ஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
செய்முறை:
வாணலியில் ஒன்றரை ஸ்பூன் நெய்யை ஊற்றி அடுப்பில் வைக்கவும். நெய் காய்ந்ததும் சேமியாவை நசுக்கிப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பிறகு மீதியுள்ள நெய்யை காய வைத்து முந்திரிப் பருப்பைச் சீராக உடைத்து சிவக்க வறுத்து, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் போட்டு தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வாணலியில் தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். நீர் கொதித்ததும் வறுத்த சேமியாவையும் உப்பையும் போட்டு நன்றாக வேக வைக்கவும். நீர் போதவில்லை எனில் நீர் சேர்த்து அடி பிடிக்காமல் கரண்டியால் கிளறி நன்றாக வேக வைத்து இறக்கி வைக்க வேண்டும்.
புளிப்பில்லாத தயிரையும் பாலையும் பாத்திரத்தில் ஊற்றி உப்பு போட்டு கலந்து வைத்து அதில் சிறிது நெய்யில் கடுகையும், பெருங்காயத்தையும் பொரிக்கச் செய்து அத்துடன் கலக்க வேண்டும். பிறகு ஏற்கெனவே வறுத்து வைத்துள்ள பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரிப் பருப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். வேக வைத்த சேமியா ஆறியதும் பால், தயிர், பச்சை மிளகாய் கலக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் எடுத்துக் கொட்டி நன்றாக கலக்கவும். மேலே பொடிப்பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலையை தூவவும்.

No comments:
Post a Comment