நாட்டு வெங்காயம் கொட்டைப் பாக்கு அளவில் 200 கிராம் தோலை உரித்து காம்பையும் தலைப்பையும் அரிந்துவிட்டு முழுதாக வைத்துக் கொள்ளவும். நான்கு பச்சை மிளகாயைத் துண்டித்து விடாமல் பிளந்து கொள்ளவும். ஒரு தக்காளிப் பழத்தை நன்றாக அரிந்து கொள்ளவும்.
100 கிராம் துவரம் பருப்பை 300 மில்லி ஜலத்தில் குழைய வேகவைத்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
ஒரு தேக்கரண்டி நல்லெண்ணையில் பத்து மிளகாய் வற்றல், ஒன்றரைத் தேக்கரண்டி மல்லி, கடலைப் பருப்பு இரண்டு தேக்கரண்டி, வெந்தயம் அரைத் தேக்கரண்டி இவற்றைப் பொன்னிறமாக வறுத்து தேங்காய்த் துருவல் இரண்டு தேக்கரண்டி, நாட்டு வெங்காயம் மூன்று இவற்றையெல்லாம் அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு எலுமிச்சங்காய் அளவு புளியை இரண்டு ஆழாக்கு ஜலத்தில் மூன்று தேக்கரண்டி உப்புப் போட்டுக் கரைத்து அரைத்து இருக்கும் சாம்பரத்தையும் போட்டுக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
இவை எல்லாம் தயாரானதும் குழம்புச் சட்டியை அடுப்பில் வைத்து, நான்கு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, துண்டித்த பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு மிக நன்றாக வதக்கவும். பிறகு புளியில் கரைத்து இருக்கும் சாம்பாரத்தை விட்டுக் கொதிக்க விடவும். குழம்பு நாலைந்து தடவை கொதித்தப் பின்னர் கரைத்து வைத்திருக்கும் துவரம் பருப்பை கொட்டிக் கிளறிக் கொடுத்து மூடி வைக்கவும்.
வெங்காயம் நன்றாக வெந்ததும் தாளிப்புக் கரண்டியை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு கால் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு அரைத் தேக்கரண்டி, கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்று, மிளகாய் வற்றல் இரண்டு இவற்றைப் போட்டு தாளிதம் செய்து சாம்பாரில் கொட்டவும். ஒரு கொதி வந்ததும் கொஞ்சம் பெருங்காயத்தைச் சிறிது நீரில் கரைத்துச் சாம்பாரில் கொட்டவும.

No comments:
Post a Comment