Wednesday, February 23, 2011

தேங்காய்ப் பால் சாதம்


தேவையானவை:

முற்றிய தேங்காய் - ஒன்று
பட்டை, கிராம்பு, ஏலக்காய், வகைக்கு - 2
பூண்டு - ஒன்று
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறு கொத்து
உப்பு - தேவையான அளவு
அரிசி - முக்கால் லிட்டர்
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
நெய் அல்லது டால்டா - 100 கிராம்
புதினா - சிறிது

செய்முறை:

தேங்காயைத் துருவி அரைத்து தேவையான அளவு பால் எடுக்கவும். இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை அம்மியில் விழுதாக அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நெய் முழுவதையும் ஊற்றி அடுப்பில் வைக்கவும். நெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை தட்டி போடவும். பிறகு இஞ்சி, பூண்டு, வெங்காய விழுதைப் போட்டு கிளறி சற்று சிவக்க வந்ததும் கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும். நீர் கொதித்து வருகையில் அரிசியைக் களைந்து போடவும்.

அரிசி பாதி வேக்காடு வெந்ததும் தேங்காய்ப் பாலை ஊற்றி உப்பைப் போட்டு கிளறி மூடி வைக்க வேண்டும்.

எல்லாம் ஒன்றாகக் கலந்து வெந்து சுண்டி வருகையில் கொத்தமல்லி, புதினா இலைகளைப் போட்டு கிளறி இறக்கி வைக்கவும்.

No comments:

Post a Comment