தேவையானவை:
அரிசி - இரண்டு ஆழாக்கு
கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
வெந்தயம் - அரை ஸ்பூன்
வற்றல் மிளகாய் - 10
கிராம்பு - 2
கடுகு - அரை ஸ்பூன்
புளி - எலுமிச்சம்பழம் அளவு
துவரம் பருப்பு - 1 ஆழாக்கு
தனியா - 2 ஸ்பூன்
பெருங்காயம் - சிறு துண்டு
தேங்காய்த் துருவல் - கொஞ்சம்
லவங்கப்பட்டை - சிறு துண்டு
உருளைக்கிழங்கு - 3
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலைப் பருப்பு, தனியா, மிளகாய், வெந்தயம், லவங்கப்பட்டை, பெருங்காயம் போன்றவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரை ஊற்றி அரிசியையும் துவரம் பருப்பையும் தனித் தனியாகவோ அல்லது ஒன்றாகவோ வேக வைக்கவும். பாதி வேகும்போது உருளைக் கிழங்கை நறுக்கி அதில் போட வேண்டும்.
இவை நன்கு வெந்ததும் புளியை நன்குக் கரைத்து புளிக் கரைசலை அரிசி, துவரம் பருப்பு, உருளை கிழங்குடன் ஊற்றி மேலும் கொதிக்க விடவும்.
சற்றைக்கு முன்பே அரைத்துத் தயாராய் வைத்திருக்கும் மசாலாவையும் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி கிளரா விட்டால் அடிப் பிடித்துக் கொள்ளும். ஆதலால் கவனமாக இருத்தல் அவசியம்.
பிறகு பதமானதும் இறக்கி கடுகு தாளித்துப் போட்டு கறிவேப்பிலைச் சேர்த்து இறக்கி விடவும்.

No comments:
Post a Comment