தேவையானவை:
அரிசி - 400 கிராம்
உளுத்தம் பருப்பு - 25 கிராம்
காய்ந்த மிளகாய் - 5
கடலைப் பருப்பு - ஒரு ஸ்பூன்
உப்பு - 2 மேஜைக்கரண்டி
முந்திரி - 50 கிராம்
மசாலாப் பொடி - 2 ஸ்பூன்
நெய் - 50 கிராம்
துவரம் பருப்பு - 25 கிராம்
புளி - தேவையான அளவு
தனியா - 2 ஸ்பூன்
கடுகு - ஒன்றரை ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு துண்டு
துருவிய தேங்காய் - அரை மூடி
நல்லெண்ணெய் - 150 மில்லி
கொத்தமல்லி தழை - சிறிதளவு
காய்கறிகள்:
கொத்தவரங்காய் - 5
காரட் - 1
உருளைக்கிழங்கு - 2
பீன்ஸ் - 5
கத்தரிக்காய் - 2
முட்டைக்கோசு - சிறிதளவு
ஊற வைத்த பச்சை பட்டாணி - 50 கிராம்
குடமிளகாய் - சிறியது
வெங்காயம் - 2
எல்லா காய்களும் சேர்ந்து 200 கிராம் அளவு இருந்தால் போதுமானது.
செய்முறை:
முதலில் அரிசியை உதிரி உதிரியாய் வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாகச் செய்து கொள்ளவும். வெங்காயம், குடமிளகாய், காரட், கோஸு காய்கறிகளைக் கழுவி சீராக நறுக்கி வதக்கி வைத்துக் கொள்ளவும். புளியை சிறிது நேரம் ஊறவைத்து கரைத்து வைத்து அதில் உப்பை போட்டு வைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காயவைத்து தனியா, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொன் வறுவலாக வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.
அகன்ற பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து உப்பு கலந்த புளிக்கரைசல், மசாலாப்பொடி, வருத்த பொடியையும் போட்டு அடி பிடிக்காமல் கொதிக்க வைக்கவும். நறுக்கிய கத்தரிக்காய், ஊற வைத்த பட்டாணி, பீன்ஸ், கொத்தவரை ஆகியவற்றை அதில் போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும்.
வேறொரு பெரிய வாணலியை அடுப்பில் வைத்து 25 மில்லி எண்ணெய் ஊற்றிக் காய வைத்து முந்திரிப் பருப்பை வறுத்து, வைத்துள்ள கடுகையும் பொறிக்கச் செய்து வடித்து வைத்த சாதத்தை அதில் கொட்டிக் கொள்ளவும். மீதமுள்ள நல்லெண்ணெய், நெய்யை சாதத்தின் மேல் பரவலாக ஊற்றவும். பிறகு வதக்கி வைத்த காய்கறிகள், தேங்காய்த் துருவல், பிறகு காய்கறிக் குழம்பையும் சிறிது சிறிதாய் அதில் ஊற்றி அடியோடு கிளறிக் கொண்டு இருக்கவும். மொத்தக் குழம்பையும் ஊற்றிச் சாதத்துடன் முழுவதுமாய் கலக்கிய பின்பு பாத்திரத்தைக் கீழே இறக்கி வைக்கவும். பிறகு கொத்தமல்லித் தழையை நன்றாகக் கழுவி பொடிப் பொடியாக நறுக்கி மேலே நன்றாக தூவவும். சாதம் ஆறியவுடன் சாபிடலாம்.

No comments:
Post a Comment