Thursday, February 24, 2011

கொத்தமல்லி சாம்பார்

துவரம் பருப்பு 100 கிராம் அளவு எடுத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு மேஜைக்கரண்டி கொத்தமல்லி விதை, ஆறு மிளகாய் இரண்டையும் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அவற்றுடன் ஒரு மூடி தேங்காய் துருவலைச் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு எலுமிச்சம் பழ அளவு புளி, ஒரு மேஜைக்கரண்டி உப்பு இரண்டையும் ஊற வைத்துக் கரைத்து அடுப்பில் வைக்க வேண்டும்.

அது கொதி வந்ததும் அரைத்த விழுதை போட வேண்டும்.

குழம்பு மேலும் கொதித்ததும், வெந்த பருப்பை மத்தினால் மசித்து அதில் கொட்ட வேண்டும்.

பச்சை கொத்தமல்லி சற்று அதிகமாக கிள்ளிப் போட வேண்டும்.

கடுகு, வெங்காயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

குழம்பு நன்றாக கொதி வந்ததும் இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment