Thursday, February 24, 2011

சாம்பார்

நீர் 200 கிராம் அளவு ஒரு பாத்திரத்தில் விட்டு அடுப்பிலேற்ற வேண்டும்.

நீர் சூடானதும் 100 கிராம் அளவு துவரம் பருப்பைப் போட்டு ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியையும் சேர்க்க வேண்டும்.

பருப்பு நன்றாக வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு எலுமிச்சங்காய் அளவு புளி, ஒரு மேஜைக்கரண்டி உப்பு இரண்டையும் 200 மில்லி நீர் விட்டு ஊற வைக்க வேண்டும்.

எட்டு மிளகாய், இரண்டு மேஜைக்கரண்டி கொத்தமல்லி விதை, ஒரு மேஜைக்கரண்டி கடலைப் பருப்பு, சிறிது பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெய் விட்டு சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும்.

அவற்றுடன் ஒரு மூடி தேங்காயைத் துருவிப் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

புளியை கரைத்து அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும்.

அது கொதித்ததும் 200 கிராம் சாம்பார் வெங்காயத்தை உரித்து அதில் போட
வேண்டும்.

வெங்காயம் வெந்ததும் வெந்த பருப்பைச் சிறிது கடைந்து அரைத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து கிளற வேண்டும்.

சாம்பார் நன்றாகக் கொதித்ததும் கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு கறிவேப்பிலை கொத்தமல்லி இரண்டையும் கிள்ளிப் போட்டு இறக்கி வைக்க வேண்டும்.

சாம்பாருக்கு வெங்காயத்துடன் வெண்டைக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி ஆகிய காய்களைப் போட்டால் நல்ல சுவையுடன் இருக்கும்.

No comments:

Post a Comment