தேவையானவை:
அரிசி - 400 கிராம்
கொப்பரைத் துருவல் - 35 கிராம்
நெய் - 200 கிராம்
கடுகு - 5 கிராம்
எலுமிச்சம் பழம் - ஒன்று
கொத்தமல்லி விதை - அரை தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
சாதிப் பத்திரி - சிறு துண்டு
உளுத்தம் பருப்பு - 20 கிராம்
கத்தரிப் பிஞ்சு - 250 கிராம்
மிளகாய் - 5 கிராம்
கடலைப் பருப்பு - 5 கிராம்
மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
மிளகாய் வற்றல் - 6
சாதிக்காய் - சுண்டைக்காய் அளவு
கிராம்பு - 4
செய்முறை:
மிளகாய், கொத்தமல்லி விதை, சாதிக்காய், சாதிபத்திரி, சீரகம், உளுத்தம் பருப்பு, கிராம்பு இவற்றைத் தனித்தனியே நெய்யில் வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.
உப்பையும் கொப்பரைத் துருவலையும் சேர்த்து நன்கு பொடி செய்து இரண்டு பாகமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
சிறிது நீரில் புழியைக் கரைத்து மசாலாப் பொருளில் பாதியைப் போட்டுக் கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
கத்தரிப் பிஞ்சை தனித்தனி துண்டுகளாக ஆகிவிடாமல் நான்காகப் பிளந்து, புளியில் கரைத்து வைத்திருக்கும் மசாலாப் பொருளைக் கத்தரிக்காயில் நிரப்ப வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு, அது காய்ந்ததும் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், கடுகு இவற்றைப் போட்டுத் தாளித்துக் கத்தரிப் பிஞ்சுகளைப் போட்டுச் சிறிது நீர் தெளித்துக் கிளறிக் கொடுக்க வேண்டும். பிறகு பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். கத்தரிப் பிஞ்சு முக்கால் பாகமாக வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அரிசியை நீர் விட்டு நன்கு களைந்து ஒன்றரை லிட்டர் நீர்க் கொள்ளக் கூடிய பாத்திரத்தில் பாதியளவு நீர் விட்டுக் கொதி வந்ததும் அரிசியையும் மஞ்சள் பொடியையும் போட்டுக் கிளறிக் கொடுக்க வேண்டும்.
அரிசி முக்கால் பதமாக வெந்ததும் நெய் 35 கிராம் போட்டுக் கிளற வேண்டும். பிறகு மீதபடுத்தி வைத்திருக்கும் பாதி மசாலாப் பொருளைப் போட்டு கிளறிக் கொடுத்து மூடி வைக்க வேண்டும்.
சிறிது நேரங்கழித்து தயார் செய்து வைத்திருக்கும் கத்தரிப் பிஞ்சுகளைப் போட்டுக் கிளறி இறக்கித் தணலில் கொஞ்ச நேரம் வைத்திருக்க வேண்டும்.
பரிமாறும் சமயத்தில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டுக் கிளறிக் கொள்ள வேண்டும்.

No comments:
Post a Comment