குருமாவுக்கு உருளைக்கிழங்கு, பட்டாணி, அவரைக்காய் அல்லது பீன்ஸ், காலிபிளவர், தக்காளி ஆகிய காய்களே வேண்டும். காய்கள் அனைத்துமாகச் சேர்த்து 250 கிராம் எடுத்து நறுக்கி, தண்ணீரில் சுத்தம் செய்து சிறிது தண்ணீர் விட்டு, ஒரு மேஜைக்கரண்டி உப்பு, சிறிது மஞ்சள் பொடி இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
நான்கு பச்சை மிளகாய், சிறு துண்டு இஞ்சி, கொத்தமல்லி அரைக்கட்டு, ஒரு பூண்டு, ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை, ஒரு தேங்காய் வில்லை, இரண்டு துண்டு லவங்கப்பட்டை முதலியவற்றைத் தனித்தனியே அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே போல ஒரு தேக்கரண்டி கசகசா, நான்கு முந்திரிப்பருப்பு இரண்டையும் தனியாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி நெய் விடவும். அது காய்ந்ததும் நான்கு ஏலக்காய், அரைத் தேக்கரண்டி லவங்கம், இரண்டு லவங்கப்பட்டை, சிறிது பிரிஞ்சி இலை ஆகிவற்றைப் போட்டுச் சிவக்க வறுக்கவும். நான்கு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி அதில் போடவும். அத்துடன் இரண்டு பச்சை மிளகாயையும் நறுக்கிப் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி விதை, கொத்தமல்லி, லவங்கப்பட்டை முதலியவற்றைப் போட்டு கிளறவும். அவை நன்றாக வதங்கியதும் தேங்காய் விழுது, கசகசா, முந்திரிப்பருப்பு முதலியவற்றைப் போட்டு ஆழாக்குத் தண்ணீர் விடவும். அது கொதி வந்ததும் வெந்த காய்களைத் தண்ணீருடன் கொட்டிக் கிளறவும். நன்றாக கொதி வந்ததும் இறக்கவும்.
சிலர் குருமாவுக்கு தயிர் விடுவார்கள். இது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது.

No comments:
Post a Comment