தேவையானவை:
பாசிப் பருப்பு - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
துவரம் பருப்பு - ஒன்றரை ஸ்பூன்
வெந்தயம் - அரை ஸ்பூன்
சாம்பார்ப்பொடி - 2 ஸ்பூன்
பெரிய தக்காளி - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
புளி - 25 கிராம்
பச்சை மிளகாய் - 2
கடுகு - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரிசி மாவு - 2 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
செய்முறை:
முதலில் பாசிப் பருப்பை நன்றாகக் கழுவி குழைய வேக வைக்கவும். புளியைத் தண்ணீரில் ஊற வைத்துக் கரைத்து வேக வைத்த பருப்பில் போட்டு தக்காளியையும் நறுக்கிப் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கடுகு, வெந்தயம், பெருங்காயம் ஆகிய அனைத்தையும் போட்டு சிவக்க வறுத்து குழம்பில் கொட்டி தாளிப்புச் செய்யவும்.
குழம்பு கொதித்து நுரை வரும்போது சாம்பார் பொடியையும், உப்பையும் போட்டு கலக்கவும். பிறகு அரிசிமாவை சிறிதளவு நீரில் கரைத்து ஊற்றி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை தூவவும்.

No comments:
Post a Comment