Wednesday, February 23, 2011

பிரிஞ்சி சாதம்


பிரிஞ்சி சாதம் செய்வதற்கு புலவு அரிசியை உபயோகித்தால் மிகவும் சிறப்பாக அமையும்.

காலிபிளவர், பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு ஆகிய காய்களை வகைக்கு 125 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

காய்களின் தோலை நீக்கித் தேவையான அளவு துண்டுகளாய்ப் போட்டுக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் காய்த் துண்டுகளைப் போட்டு 200 மில்லி அளவு நீர் விட்டு இரண்டு மேசைக் கரண்டி உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து அடுப்பிலேற்ற வேண்டும்.

ஒரு கைப்பிடி புதினா இரண்டு பல் பூண்டு சிறு துண்டு இஞ்சி சிறிது கொத்தமல்லி சேர்த்து அம்மியில் சிறிது நீர் தெளித்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் ஆறு, வெங்காயம் பத்து எடுத்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

காய்கள் வெந்ததும் இறக்கி வைத்துவிட்டு இன்னொரு பாத்திரத்தில் ஒரு கரண்டி நெய்யைப் பாத்திரத்தில் விட்டு அது காய்ந்ததும் பத்து இலவங்கம், பத்து பட்டை, நான்கு ஏலக்காய், சிறிது பிரிஞ்சி இலை போட்டு சிவக்க வறுக்க வேண்டும்.

வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் விழுதைப் போட்டு நன்றாக கிளற வேண்டும்.

பிறகு 800 மில்லி அளவு நீர் விட்டு 400 கிராம் அரிசியைக் களைந்து போட வேண்டும். அரிசி பாதி வெந்ததும் இரண்டு மேஜைக்கரண்டி உப்பைப் போட்டு கிளற வேண்டும்.

பிறகு வெந்த காய்களைப் போட்டு இரண்டு கரண்டி நெய்யையும் விட்டு பாத்திரத்தின் மேல் பாகத்தைத் தட்டினால் மூடி விட வேண்டும்.

அடுப்பில் தீயைக் குறைதுவிட்டுத் தணலிலே வேகுமாறு செய்ய வேண்டும். கால் மணி நேரத்தில் பிரிஞ்சி பக்குவமாக வெந்து விடும்.

No comments:

Post a Comment