தேவையானவை:
ரவை - 500 கிராம்
பாசி பருப்பு - 20 கிராம்
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - முக்கால் தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
நெய் - 100 மில்லி
முந்திரி - 50 கிராம்
எலுமிச்சைச் சாறு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
முந்திரிப் பருப்பை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும்.
பாசி பருப்பை முக்கால் வேக்காடு வேக வைத்து நீரை வடித்துக் கொள்ள வேண்டும். வடித்த தண்ணீரைக் கொட்டிவிட வேண்டாம். ரவையை வேக வைக்க அதனைப் பயன் படுத்தலாம்.
கடாயை அடுப்பிலேற்றி நெய்யை ஊற்றிக் காயவிட வேண்டும். நெய் காய்ந்ததும் மிளகு சீரகத்தைப் போட வேண்டும். வெடித்ததும் முந்திரிப் பருப்பைப் போட வேண்டும். பிறகு மெல்லியதாகச் சீவிய இஞ்சித் துண்டுகளைப் போட்டு வதக்க வேண்டும். கறிவேப்பிலையைப் போட்டு ஒன்றரை லிட்டர் அளவு நீரை விட்டு உப்பைப் போட்டுக் கொதிக்க விட வேண்டும்.
நீர் கொதிக்கத் தொடங்கியதும் ரவையைக் கொட்டிக் கட்டிவிடாமல் கிளறி விட வேண்டும்.
ரவை நன்றாக வெந்ததும் பாசி பருப்பைப் போட்டு கிளறி எலுமிச்சம் பழச் சாறை விட்டு இறக்கி விட வேண்டும்.

No comments:
Post a Comment