Monday, February 28, 2011

புடலங்காய்ப் பொரியல்

புடலங்காய் நானூறு கிராம், இதை வட்டமாக அரிந்து முக்கால் ஆழாக்கு ஜலம் விட்டு வேக விடவும்.

மிளகாய் வற்றல் இரண்டு, மிளகு 5 , மஞ்சள் பொடி சிறிது இவற்றை நேக அரைத்து புடலங்காயில் போடவும். உப்பு கால் தேக்கரண்டி போட்டு மூடி வைக்கவும்.

புடலங்காய் நன்றாய் வெந்ததும் ஜலத்தைக் கொட்டி விட்டு, புடலங்காயை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

பிறகு தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து நெய் இரண்டு தேக்கரண்டி விட்டுக் காய்ந்ததும் கறி வடகம் இரண்டு போட்டு சிவந்தவுடன் வேக வைத்திருக்கும் புடலங்காயை அதில் போட்டு, தேங்காய்த் துருவல் கால் மூடி போட்டு கறி மசாலாப் பொடி ஒரு தேக்கரண்டி போட்டு புரட்டிக் கொடுத்து இறக்கிக் கொள்ளவும்.

No comments:

Post a Comment