இளம் கத்தரிக்காய் 200 கிராம் எடுத்து அதன் காம்பை அரிந்து விட்டு, துண்டித்துப் போகாமல் காம்புப் பக்கம் ஒரு முறையும், அடிப்பக்கம் ஒரு முறையும் பிளந்து தண்ணீரில் போடவும்.
பிறகு ஒன்றரை லிட்டர் கொள்கிற குழம்புப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கால் ஆழாக்கு நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு கால் தேகரண்டி, உளுத்தம் பருப்பு அரைத் தேக்கரண்டி, கடலைப் பருப்பு அரைத் தேக்கரண்டி போட்டுச் சிவந்ததும் வெந்தயம் பத்து போட்டு, வறுபட்டதும் அரிந்து வைத்திருக்கும் கத்தரிக்காயை போட்டு வதக்கவும்.
400 மில்லி ஜலத்தில் பெரிய எலுமிச்சம் பழ அளவு புளி, மூன்று தேக்கரண்டி உப்பு இந்த இரண்டையும் போட்டு நன்றாய் கரைத்து, மஞ்சள் பொடி சிறிதளவு, வெல்லம் பெரிய சுண்டைக்காய் அளவு, சாம்பார் பொடி இரண்டு தேக்கரண்டி போட்டு நன்றாய்க் கரைத்து வைத்துக் கொண்டு, கத்தரிக்காய் நன்றாய் வதங்கிய பின் கொட்டிக் கிளறிக் கொடுத்து மூடி வைக்கவும்.
குழம்பு நன்றாகக் கொதித்து, காய் வெந்ததும், ஒரு தேக்கரண்டி அரிசிமாவைக் கொஞ்சம் நீரில் கரைத்துக் கொட்டிக் கிளறிவிட்டு சிறிதளவு பெருங்காயத்தை கரைத்து விட்டு இறக்கவும்.
விருப்பம் உள்ளவர்கள் வெள்ளைப் பூண்டு 40 கிராம் உரித்துக் கத்தரிப் பிஞ்சுகளுடன் சேர்த்து வதக்கிக் குழம்பு செய்து கொள்ளவும்.

No comments:
Post a Comment