Monday, February 28, 2011

சாதாரண ரசம்

துவரம் பருப்பு ஒரு தேக்கரண்டி, மிளகு அரைத் தேக்கரண்டி, மிளகாய் நான்கு, கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி ஆகியவற்றை எடுத்து, அப்படியே அம்மியில் வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

சிறு எலுமிச்சம் பழ அளவு புளி, ஒரு மேஜைக்கரண்டி உப்பு இரண்டையும் ஒரு பாத்திரத்திலிட்டு 200 மில்லி நீர் விட்டு தயார் செய்த பொடியையும் போட்டு அடுப்பில் வைக்க வேண்டும். ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்க்க வேண்டும்.

ரசம் நன்றாகக் கொதித்ததும் மேலும் 200 மில்லி நீர்விட்டுச் சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment