துவரம் பருப்பு 300 கிராம் இதைக் கால்மணி நேரம் ஜலத்தில் ஊறவைத்து வடிய வைத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாய் 50 கிராம், மல்லித் தழை 30 கிராம், உப்பு அரைத் தேக்கரண்டி, இஞ்சி சிறு துண்டு, தேங்காய்த் துருவல் மூன்று தேக்கரண்டி, இவற்றை எல்லாம் வடிய வைத்திருக்கும் துவரம் பருப்புடன் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இந்த மொத்தையில் பெரிய எலுமிச்சம் பழம் ஒன்றை விதைகள் நீக்கிப் பிழிந்து பிசறிக் கொள்ளவும்.
பிறகு சிறு கொய்யாக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி இட்லியைப் போல் நீராவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நன்றாக ஆறிய பின் ஒரு சட்டியில் 100 கிராம் நெய் விட்டுக் காய்ந்ததும் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் உருண்டைகளை நான்கு நான்காகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். மிளகாய் வற்றல் பத்து, தனியா ஒரு தேக்கரண்டி, மிளகு கால் தேக்கரண்டி, தேங்காய்த் துருவல் இரண்டு தேக்கரண்டி இவற்றைக் கொஞ்சம் நெய்யில் தனித்தனியாக வறுத்து ஒன்றாய்ச் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்துக் கொள்ளவும்.
பிறகு எலுமிச்சங்காய் அளவு புளி, மூன்று தேக்கரண்டி உப்பு இரண்டையும் மூன்றரை ஆழாக்கு ஜலத்தில் கரைத்து முன்பு அரைத்து வைத்து இருக்கும் சம்பாரத்தைப் போட்டுக் கரைத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து கரைத்து வைத்திருக்கும் குழம்பைக் கொட்டி நன்றாகக் கொதிக்க விடவும்.
நன்கு கொதி வந்ததும் வறுத்து வைத்திருக்கும் பருப்பு உருண்டைகளைப் போட்டுக் கொதிக்க விடவும். சிறிது நேரம் கொதித்த பின் இரண்டு தேக்கரண்டி நெய்யைத் தாளிப்புக் கரண்டியில் விட்டுக் காய்ந்ததும் மிளகாய் வற்றல் இரண்டு கிள்ளிப் போட்டு கடுகு கால் தேக்கரண்டி போட்டு தாளித்ததைக் குழம்பில் கொட்டி உருண்டைகள் உடைந்து போகாமல் கிளறிக் கொடுத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி கடலை அளவு பெருங்காயத்தைச் சிறிது ஜலத்தில் கரைத்துக் குழம்பில் கொட்டிக் கிளறி இறக்கவும்.

No comments:
Post a Comment