100 கிராம் துவரம் பருப்பை 300 மில்லி ஜலத்தில் வேக வைக்கவும். பருப்பு அரைவாசி வெந்ததும் இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை நன்றாய் கழுவிப் பருப்பில் போடவும். 200 கிராம் நூல்கோலை அரிந்து பருப்பு ஜலத்தில் போட்டு வேக விடவும்.
6 மிளகாய் வற்றல், 2 தேக்கரண்டி தனியா, ஒரு தேக்கரண்டி கடலைப் பருப்பு, அரைத் தேக்கரண்டி மிளகு, அரைத் தேக்கரண்டி உளுத்தம் பருப்பு இவற்றைப் பொன் வறுவலாக வறுத்து இரண்டு தேக்கரண்டி தேங்காய்த் துருவலையும் சேர்த்து வெண்ணெய்ப் போல் அரைத்துக் கொள்ளவும்.
எலுமிச்சம் பழ அளவு புளியை 200 மில்லி ஜலத்தில் கரைத்து, வெந்து கொண்டிருக்கும் பருப்பில் விடவும். சிறிது கொதித்ததும் 100 மில்லி ஜலத்தில் அரைத்திருக்கும் சாம்பாரதைக் கரைத்துக் கொட்டிக் கிளறி மூடவும்.
சாம்பார் கொதித்துப் பக்குவமானதும் நெல்லிக்காய் அளவு வெல்லத்தை சாம்பாரில் போடவும்.
கொதித்ததும் இறக்கி வைத்துக் கொண்டு, தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து இரண்டு தேக்கரண்டி கடுகும், கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்றும் போட்டு சாம்பாரை அதில் கொட்டி கொதித்ததும் இறக்கி, கடலைப்பருப்பு அளவு பெருங்காயத்தைக் கரைத்து சாம்பாரில் ஊற்றி 10 மல்லித் தழையை கிள்ளிப் போடவும்.

No comments:
Post a Comment