Monday, February 28, 2011

தக்காளி ரசம்

தேவையானவை:

தக்காளி - 250 கிராம்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் - மூன்று
பெருங்காயம் - ஒரு துண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - பத்துப் பற்கள்
கடுகு - அரைத் தேக்கரண்டி
வெந்தயம் - அரைத் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
மல்லித் தழை - அரைக்கட்டு

செய்முறை:

தக்காளியை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். உப்பு, ரசப்பொடி, தட்டிய மிளகு, சீரகம், பூண்டில் முக்கால் பாகம், உப்பு முதலியவற்றையும் சேர்த்துப் பிசைய வேண்டும். ஒரு தக்காளிப் பழத்தை மட்டும் சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை வரிசையாகப் போட்டு வெடித்ததும் பிறகு பூண்டு, சீரகம் தட்டியதில் எடுத்து வைத்ததைப் போட்டு வாசனை வந்ததும் வெட்டிய தக்காளித் துண்டுகளைப் போட்டு வதக்க வேண்டும்.

சற்று வதங்கியதும் கரைத்த ரசத்தை ஊற்ற வேண்டும். கொதிக்கும் போது சிறிது மல்லித் தழை போட்டு இறக்கி விட வேண்டும். வெந்த பருப்பு இருந்தால் கொஞ்சம் சேர்க்கலாம்.

No comments:

Post a Comment