Thursday, February 24, 2011

குடமிளகாய் குழம்பு

பத்து குடமிளகாயை அலம்பி காம்பை அரிந்து இரண்டாகப் பிளந்து வைத்துக் கொள்ளவும். ஒரு சிறு தக்காளிப் பழம் நன்றாகப் பழுத்தது நான்காய் அரிந்து கொள்ளவும்.

முக்கால் தேக்கரண்டி வெந்தயம், அரைத் தேக்கரண்டி கடுகு, பெருங்காயம் சுண்டைக்காய் அளவு எடுத்து வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் சட்டியை வைத்து நான்கு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சுத்தப்படுத்தி வைத்திருக்கும் காய் வதங்கியதும் கரைத்து வைத்திருக்கும் புளி ஜலத்தைக் கொட்டிக் கிளறிவிட்டு மூடவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து சிறிது வற்றியதும் தயார் செய்து வைத்திருக்கும் பொடியைத் தூவி கொதிக்க விடவும்.

அதன் பிறகு அரிசிமாவு ஒரு தேக்கரண்டி, வெல்லம் சுண்டைக்காய் அளவு இரண்டையும் சிறிது ஜலத்தில் கரைத்து குழம்பில் கொட்டிக் கொதிக்க விடவும். குழம்பு ஒன்றரை ஆழாக்கு இருக்கும் சமயம் இறக்கவும்.

No comments:

Post a Comment