Thursday, February 24, 2011

அப்பளக் குழம்பு

300 மில்லி ஜலத்தில் எலுமிச்சங்காய் அளவு புளியும் ஒன்றரைத் தேக்கரண்டி உப்பும் போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நான்கு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகாய் வற்றல் நான்கு, கடலைப் பருப்பு ஒரு தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி, வெந்தயம் அரைத் தேக்கரண்டி, பெருங்காயம் சுண்டைக்காய் அளவு, சாம்பார்ப் போடி ஒரு தேக்கரண்டி போட்டுத் தாளிதம் செய்து கரைத்து வைத்திருக்கும் புளியைக் கொட்டி கொதிக்கவிடவும்.

அரிசி மாவு ஒரு தேக்கரண்டி, மஞ்சள் தூள் கொஞ்சம், வெல்லம் சுண்டைக்காய் அளவு கரைத்து குழம்பில் கொட்டிக் கிளறி விடவும். குழம்பு கொதித்ததும் அப்பளம் நான்கைப் பொரித்துத் தூள் செய்து குழம்பில் போடவும். கறிவேப்பிலை ஒரு ஆர்க்கும் கொத்தமல்லித் தழை பத்தும் அலம்பிப் போட்டுக் கிளறிவிட்டு குழம்பு நன்றாகச் சுண்டியதும் இறக்கவும்.

No comments:

Post a Comment