Thursday, February 24, 2011

வெண்டைக்காய் புளிக்குழம்பு

வெண்டைக்காய் 200 கிராம், இதைக் காம்பு நுனி போக்கி அரை அங்குல நீளத் துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.

மிளகாய் வற்றல் பத்து, மிளகு கால் தேக்கரண்டி, சீரகம் கால் தேக்கரண்டி, வெந்தயம் கால் தேக்கரண்டி, அரிசி கால் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு இரண்டு தேக்கரண்டி, தனியா ஒன்றரை தேக்கரண்டி, தேங்காய்த் துருவல் ஒன்றரை தேக்கரண்டி, இவற்றில் மிளகாயைக் கொஞ்சம் நெய்விட்டு வறுத்து தேங்காய்த் துருவல் தவிர மற்றவற்றை நெய்விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் தவிர மற்றவற்றை நெய் விடாமல் வறுத்து பிறகு தேங்காய்த் துருவலையும் சேர்த்து அம்மியில் வைத்து வெண்ணெய்ப் போல் அரைத்துக் கொள்ளவும்.

400 மில்லி ஜலத்தில் எலுமிச்சங்காய் அளவு புளி, 3 தேக்கரண்டி உப்பும் போட்டுக் கரைத்து மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை போட்டு கலக்கி, அறைதிருக்கும் சம்பாரத்தைப் போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

பிறகு, குழம்பு செய்யும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு கால் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு கால் தேக்கரண்டி, துவரம் பருப்பு கால் தேக்கரண்டி போட்டு பருப்புகள் சிவந்ததும் கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்றை உருவிப் போட்டு சப்தம் நின்றதும், காய்களைப் போட்டு வதக்கி கரைத்து வைத்திருக்கும் சம்பாரத்தைக் கொட்டி கொதிக்க விடவும்.

குழம்பு நன்றாய் கொதித்து வெண்டைக்காய் வெந்ததும் சிறிதளவு வெல்லம் போட்டுக்  கிளறிவிடவும். ஒரு கொதி வந்ததும் கடலைப் பருப்பு அளவு பெருங்காயத்தைக் கரைத்து ஊற்றி கொதித்ததும் இறக்கவும்.

1 comment:

  1. வெண்டைக்காய் புளிக்குழம்பு, கத்தரிக்காய் புளிகுழம்பு, வத்தல் புளிக்குழம்பு போன்ற அனைத்து வகையான புளிக்குழம்பு பற்றி தெரிந்து கொள்ள http://www.valaitamil.com/curry-ladies-finger-puli-kulambu_5227.html

    ReplyDelete