மிளகாய் வற்றல் ௫, துவரம் பருப்பு ஒரு தேக்கரண்டி, வெந்தயம் கால் தேக்கரண்டி, கடுகு கால் தேக்கரண்டி, பெருங்காயம் சிறிதளவு இவற்றை எல்லாம் நல்லெண்ணெய் விட்டுத் தனித்தனியே வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.
முருங்கைக்காய் இரண்டு, தக்காளி ஒன்று, வெள்ளைப் பூண்டு சிறிது அரிந்து சுத்தம் செய்துகொண்டு சட்டியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்று, உளுத்தம் பருப்பு கால் தேக்கரண்டி போட்டுத் தாளிதம் செய்து காய்களையும் வெள்ளைப் பூண்டையும் போட்டு வதக்கி, பிறகு சிறு எலுமிச்சங்காய் அளவு புளியும், ஒன்றரை தேக்கரண்டி உப்பும் இரண்டு ஆழாக்கு ஜலத்தில் கரைத்து, கையில் கொட்டி கொதிக்கவிடவும்.
குழம்பு நன்றாகக் கொதித்து, காயும் பூண்டும் வெந்ததும், சுத்தம் செய்து வைத்திருக்கும் பொடியைத் தூவிக் கிளறிவிடவும்.
குழம்பு கொதித்து நெடி போனதும், ஒரு தேக்கரண்டி அரிசி மாவையும், சுண்டைக்காய் அளவு வெல்லத்தையும் கரைத்துக் குழம்பில் கொட்டி வற்றியதும் இறக்கவும்.

No comments:
Post a Comment