1. குழந்தைகளின் காலில் முள் குத்தி இருந்தால் எடுக்கும் போது வலி தெரியாமல் இருக்க முதலில் சிறிது ஐஸில் வைத்து மரத்துப் போகச் செய்துவிட்டு பிறகு எடுக்கவும்.
2. மாம்பழத்தில் சர்க்கரைச் சத்து அதிகம். எனவே நீரழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
3. பப்பாளிப் பழத்தைத் தேனில் தொட்டு உண்டால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். இதை தாய்ப்பால் கொடுப்பவர்கள் தினமும் உண்ணலாம்.
4. தொடர்ந்து முட்டைக்கோசை சாப்பிடுபவர்களுக்கு நெஞ்சுவலி வராது. அடிக்கடி ஜலதோஷமும் வராது.
5. நாய்க்கடிக்கு சுண்டைக்காய் செடி இலையையும் உப்பையும் அரைத்து கடிவாயில் பூசவும்.
6. நெல்லிக்காயைத் தேனில் ஊறவைத்துச் சாப்பிடுவது இளமையோடிருக்க உதவுகிறது.
7. வாழைத்தண்டு, முள்ளங்கி, வெள்ளரி ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் அதிக உடல் எடை குறைந்து சீரான உடல் எடை வரும்.
8. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூச வயிற்றுப் பொருமல் நீங்கும்.
9. சுக்கு மிளகு இரண்டையும் ஒரு ஸ்பூன் பால் விட்டு அரைத்து பொட்டிலும், மூக்கின் மேலும் நெற்றியிலும், தடவினால் தலை வலி மறைந்து போகும்.
10. மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி, பல்லும் பளிச்சென்று இருக்கும்.
11. மஞ்சளை அரைத்து அத்துடன் சிறிது பன்னீரைக் கலந்து பூசிக் கொண்டு குளித்தால் தேவையில்லாத இடங்களில் இருக்கும் ரோமங்கள் உதிர்ந்துவிடும்.
12. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வறுத்து, பனங்கற்கண்டு சேர்த்து காலையிலும் மாலையிலும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டால் வயிற்றின் சுற்றளவு குறையும்.
13. நெருப்பு அல்லது சுடுநீர் பட்ட இடத்தில பெருங்காயத்தை அரைத்து பூசினால் எரிச்சல் குறையும். கொப்பளமும் ஏற்படாது.
14. குழந்தைகளுக்கு கஞ்சி காய்ச்சும் போது சிறிது சோயா பீன்ஸ் மாவைக் கூட்டிக் கொள்ளுங்கள். இதனால் அதிக அளவு புரதச் சத்து கிடைக்கும்.
15. பல் ஈற்றில் புண் கண்டால் படிகாரத்தையும், கடுக்காயையும் பொடி செய்து நீரில் கரைத்து வாய் கொப்பளித்து வந்தால் புண் ஆறும்.
16. உறங்கச் செல்லுமுன் ஒரு டம்ளர் வெந்நீர், அரை மூடி எலுமிச்சம் பழத்தை விட்டு இரண்டு தேக்கரண்டி தேன் விட்டுக் கலக்கிக் குடித்தால் நல்ல உறக்கம் வரும்.
17. கண்டங்கத்திரி என்ற கத்தரிக்காய் உள்ள விதையுடன் சிறிது மஞ்சள் வைத்து அரைத்து தடவினால் உடலில் ஏற்படும் வீக்கம் குறையும்.
18. செம்பருத்தி பூக்களை காலையில் இரண்டு மூன்று தினசரி உட்கொண்டால் மலச்சிக்கல் விலகும்.
19. முருங்கைப் பிஞ்சு உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். தாதுவை விருத்தி பண்ணும். லேசான சுரம் தணியும். நாவில் ருசி அறியும் உணர்வை உண்டு பண்ணும்.
20. முருங்கை இலைச் சாற்றைப் பிழிந்து சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் நீர்க்கோவை நீங்கும். இதைக் குழந்தைகளும் பெரியவர்களும் உட்கொள்ளலாம்.
21. பூண்டு பற்களை அம்மியில் வைத்து அரைத்து எலுமிச்சம் பழச் சாற்றில் கலந்து தலைக்குத் தேய்த்து ஊறவைத்து குளித்தால் பேன் ஒழியும்.
22. உணவில் அடிக்கடி கொள்ளுப் பயிரை சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.
23. நான்கு நாட்கள் தொடர்ந்து பப்பாளிப் பழத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் பல்வலி, பல்லில் ரத்தம் வடிதல், பல் ஈறுகளில் வரும் நோய் அத்தனையும் குணமாகும்.
24. காலையில் சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆற வைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்பு வலியும், வெள்ளைப்படுதலும் நிற்கும்.
25. சுரைக்காய் மூளை பலம் பெறவும், மனக்கவலையை போக்கவும், சிறுநீர் கோளாறுகள் நீங்கவும், உடலில் உள்ள கெட்ட நீரை போக்கி உடல் இளைக்கவும் செய்யும்.
26. பசி உண்டாக இஞ்சி, சீரகம், மிளகு, திப்பிலி, சதகுப்பை, கிராம்பு ஆகியவைகளை இடித்து துளசி சாறு விட்டு அரைத்து மாத்திரையாக்கி சாப்பிட பசி உண்டாகும். கீரிப்பூச்சியை வெளிப்படுத்தும்.
No comments:
Post a Comment