Tuesday, February 22, 2011

எலுமிச்சம் பழ சாதம்


தேவையானவை:

பச்சரிசி - 400 கிராம்
எலுமிச்சம் பழம் - 2
மஞ்சள் பொடி- சிறிதளவு
நல்லெண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 5 கிராம்
கடலை பருப்பு - 10 கிராம்
உளுத்தம் பருப்பு - 10 கிராம்
சிகப்பு மிளகாய் - 2
பச்சை மிளகாய் - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை நன்றாக வேக வைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவைக்க
வேண்டும்.

எலுமிச்சம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து சாதத்தில் கலக்க வேண்டும்.

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை சேர்த்து வதக்கி சாதத்தில் கலந்து நன்றாக கிளற வேண்டும்.

No comments:

Post a Comment